முக்காடு போட்டு ேபாராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தாராபுரம் அருகே 58-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
- இந்நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வழங்க ப்பட்டது .
- விவசாயிகளால் வழங்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடை உடனே வழங்க வேண்டும் என்றனர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி கோனேரிப்பட்டியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 58-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தடுத்து நிறுத்திய போலீசார்
இந்தநிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து இன்று கோனேரிப்பட்டி பிரிவு அருகே போராட்ட பந்தலில் இருந்து சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருந்த விவசாயி கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவ சாயிகள் தலையில் முக்காடு போட்டு கோஷங்கள் எழுப்பினர் .
இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறு கையில்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் அணை கட்ட விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கினர். இந்நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வழங்க ப்பட்டது . ஆனால் இன்று வரை தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு பதில் அளிக்காமல் விவசாயிகளின் நில ங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. இதனால் கடந்த 58 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். சென்னை தலைமை செய லகத்தை முற்றுகையிட சென்ற எங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விவ சாயிகளால் வழங்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடை உடனே வழங்க வேண்டும் என்றனர்.