உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-11-14 11:09 IST   |   Update On 2022-11-14 11:09:00 IST
  • முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ள நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதி ஏற்பட்டு வந்தார் .
  • அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் மூன்றாவது வடக்கு வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி கோமதி(வயது60). இவர் தனது தங்கை மகன் சக்தி மணிகண்டன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் வீட்டில் நடைபயிற்சி மேற்கொண்ட போது தவறி கீழே விழுந்து முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ள நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதி ஏற்பட்டு வந்தார் .பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த கோமதி நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வழக்கம்போல் காலை எழுந்த அவரது குடும்பத்தினர். அவர் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சக்தி மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News