மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
- தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.
- திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.
திருப்பூர்:
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். சுல்தான்பேட்டை, எம்.செட்டிப்பாளையம், அக்ரஹாரபுத்தூர், வேட்டுவபாளையம், மங்கலம் போன்ற பகுதிகளுக்கு மங்கலத்தில் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.
இந்த அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கட்டிட தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.