உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

முத்தூர் மாதவராஜ பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் - நாளை நடக்கிறது

Published On 2023-10-06 15:45 IST   |   Update On 2023-10-06 15:46:00 IST
  • முடிவில் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
  • விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 காங்கயம்:

திருப்பூர் மாவட்டம், முத்தூர் சீதாதேவி, பூமாதேவி சமேத மாதவராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நாளை காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தொழில் வளம் சிறந்து விளங்கவும், பொருளாதார நிலை மேம்படவும், திருமணத்தடை நீங்கவும் மகா சுதர்சன ஹோமம் மற்றும் மகாலட்சுமி கனக அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்வாக அன்று காலை 6.30 மணிக்கு மாதவராஜ பெருமாள், ஞானவிநாயகர், சுவர்ண கருடன், பால ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜைகள் நடக்கிறது.முடிவில் காலை 8 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் திரளான பக்தர்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News