உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் மையம்- கலெக்டர் உத்தரவு

Published On 2022-07-17 06:41 GMT   |   Update On 2022-07-17 06:41 GMT
  • விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
  • இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமுக்கு வரும்போது, மற்ற தகவல்களை அவர்கள் பெறும் வகையில் தகவல் மையத்தை அமைத்தால் விண்ணப்பிக்கும் முறை, மனு எழுதுவது, மற்ற துறைகளுக்கு செல்வது போன்ற விவரங்களை கேட்டு அறிய முடியும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் இந்த முகாமில் பெற்றுக்கொண்டால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News