உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தடை உத்தரவை மீறி புழங்கும் பிளாஸ்டிக் கவர்கள் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2022-07-16 04:31 GMT   |   Update On 2022-07-16 04:31 GMT
  • வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.
  • மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம்.

திருப்பூர்:

சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பாலிதீன் பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1 முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.ஆனால் தடை உத்தரவை மீறி, திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக்காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பலமுறை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டன.

தற்போது வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.கடந்த ஓராண்டுக்கு முன் தடை உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இனி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்த பொதுமக்களும், துணி பைகளுக்கு மாறினர். இதனால் துணிப்பைகளின் பயன்பாடு அதிகரித்து, ஜவுளி உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது காலமே நீடித்தது. மீண்டும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம். தடை உத்தரவை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள், இவற்றை கண்காணித்து பிளாஸ்டிக் பைகளை அழிப்பதுடன் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

Tags:    

Similar News