உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் - சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மனு

Published On 2023-11-03 07:30 GMT   |   Update On 2023-11-03 07:31 GMT
  • கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
  • ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

காங்கயம் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காங்கயம் கோட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில செயலாளர் இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசின் விதிகளின் படி அரசாங்க கடிதங்கள் அரசு துறை நிறுவனமான இந்திய தபால் துறை மூலமாக தான் அனுப்ப வேண்டும். ஆனால் திருப்பூர் மின்சார வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள அதிகாரிகள் தனியார் கூரியர் நிறுவனம் மூலமாக அனுப்பி வருவது சட்டவிரோத செயலாகும். சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் உரிய தீர்வுகாண வேண்டும். புகார் மனுக்களை கிடப்பில் போட்டு தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பது சட்டவிரோதமான செயலாகும். தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைத்தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இதில் சமூக ஆர்வலர்கள் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ஆண்டிபாளையம் ரவி, கூலிபாளையம் ஈஸ்வரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News