உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவிநாசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-30 12:43 IST   |   Update On 2022-10-30 12:43:00 IST
  • பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
  • அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.

அவிநாசி:

அவிநாசி அரசு மருத்துவமனையில் பொது பிரிவு, வெளி நோயாளிகள் பகுதி, பிரசவ அறை, அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே,அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உடனிருந்தார்.

பின் மருத்துவர்களிடம் உள் மற்றும் வெளி நோயாளிகள் வருகை, பிரசவத்திற்காக வரும் பெண்களின் வருகை குறித்தும் கேட்டனர். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க வைத்துள்ள இன்குபேட்டர், எடை பார்க்கும் கருவிகள் உள்ளிட்டவை சரியாக வேலை செய்கிறதா என கலெக்டர் ஒவ்வொன்றாக இயக்கி சரி பார்த்தார்.

நோயாளிகளுடன் தங்குவோர் அறைகளில் சென்று பார்வையிட்டனர். அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.

கருவலூரில் ராமநாதபுரம் பகுதியில் சாலை பணிகள், நரியம்பள்ளி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது. அப்போது அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், பி.டி.ஓ., விஜயகுமார், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News