உள்ளூர் செய்திகள்

 பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த காட்சி. 

ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் புத்தக திருவிழா

Published On 2022-06-30 10:31 IST   |   Update On 2022-06-30 10:31:00 IST
இன்று 2-வது நாளாக புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

திருப்பூர்:

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது. இதை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தொடங்கி வைத்தார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ், பொருளாளர் ஸ்ருதி, பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டனர். இதில் கோவை ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் படைப்புகளும் மற்றும் கவிநிலா பதிப்பகத்தில் பள்ளி மாணவி மேகா பிரியதர்ஷினியின் சிறுகதை படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத் திருவிழாவை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பார்வையிட வசதியாக இன்று 2-வது நாளாக புத்தகத்திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News