உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடம் அருகே பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது

Published On 2023-05-21 13:13 IST   |   Update On 2023-05-21 13:14:00 IST
  • பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் குடியிருந்து வருகிறார்.
  • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பல்லடம்:

சிவகங்கையைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் காமாட்சி என்கிற கவிதா (வயது 30). இவர் தற்போது பல்லடம் அடுத்த கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள அபிராமி நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்த போது நாகை திருக்குவளை, கொடியளாத்தூரைச் சேர்ந்த அத்தியப்பன் என்பவரது மகன் பிரகாஷ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது திருப்பூர், வீரபாண்டி சுண்டமேடு பகுதியில் தங்கி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் மில்லில் ஒன்றாக பணிபுரிந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று பிரகாஷ், காமாட்சி என்கிற கவிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திருமணம் செய்து கொள்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காமாட்சி என்ற கவிதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் சத்தம் போடவே உடனடியாக அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஓடிவிட்டார். சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படை யில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த பிரகாஷை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News