உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி. 

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு 'சீல்' - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-10-18 08:14 GMT   |   Update On 2023-10-18 08:14 GMT
  • தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
  • உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை எச்சரித்துள்ளார்.

திருப்பூர்:

தமிழக அரசால்தடை செய்ய பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பைகள் டம்ளர் கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ. 43000 அபராதம் விதித்து சீல் வைத்தனர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன், காங்கயம் காவல் நிலைய போலிசார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். காங்கயம் அகஸ்திலிங்கப்பாளையம், ஆலாம்பாடி, தாராபுரம் ரோடு, கீரனூர், பூமான்டவலசு பகுதிகளிலுள்ள 10 கடைகளில் இந்த ஆய்வு மேற்கொண்டனர். அப்போது

தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கடைகளுக்கும் மொத்தமாக ரூ. 43000 அபராதம் விதித்தும் கடைகளையும் மூடி சீல் வைத்தனர். மீண்டும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் கடைகளுக்கு உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News