உள்ளூர் செய்திகள் (District)

புதிய பேட்டரி வாகனம் அணிவகுத்த நின்ற காட்சி

உடுமலை நகராட்சிக்கு குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள்

Published On 2023-07-01 03:45 GMT   |   Update On 2023-07-01 03:45 GMT
  • நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது
  • 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

உடுமலை :

உடுமலை நகராட்சிக்கு குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் நகரங்களில் குப்பை அகற்றுவது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உடுமலை நகராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் வாயிலாக வீடுகள் ,வணிகம் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பை சிறிய அளவிலான பேட்டரி வாகனங்கள் வாயிலாக பெரிய வாகனங்கள் மற்றும் நுண் உர குடில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஏற்கனவே நகராட்சியில் 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கூறுகையில்,தற்போது 7வாகனங்கள் வந்துள்ளன. மேலும் 3 வாகனங்கள் வாங்க வேண்டி உள்ளது . விரைவில் தூய்மைப் பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றனர்.இந்த புதிய பேட்டரி வாகனங்களின் வருகையால் நகரின் குப்பை பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News