உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வடக்கு உழவர்சந்தை அருகே சிதலமடைந்த சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

Published On 2022-11-24 06:55 GMT   |   Update On 2022-11-24 06:55 GMT
  • பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள உழவர் சந்தை அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடி மகிழ்ந்தனர். வயது மூத்தவர்கள் மாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு விட்டு பின்பு இந்த பூங்காவில் ஓய்வெடுத்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்த பூங்காவில் போடப்பட்டிருக்கும் இரும்பு வேலியை உடைத்து அங்கு இருக்கும் நாற்காலிகளில் மது பிரியர்கள் மாலை நேரத்தில் சவுகரியமாக மது அருந்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவை சரி செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News