உள்ளூர் செய்திகள்

நலவாரிய புதிய பதிவு அட்டையை அமைச்சர் பயனாளிக்கு வழங்கிய காட்சி

வெள்ளகோவிலில் ரூ.74 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-07 06:41 GMT   |   Update On 2022-10-07 06:41 GMT
  • வெள்ளகோவிலில் விலையில்லா பட்டா மற்றும் நல வாரிய புதிய பதிவு அட்டை வழங்கும் விழா திருப்பூர்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது.
  • ரூ.74 லட்சம் மதிப்பிலான திடப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவிலில் விலையில்லா பட்டா மற்றும் நல வாரிய புதிய பதிவு அட்டை வழங்கும் விழா திருப்பூர்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் திருப்பூர் தொழிலாளர் நல உதவி ஆணையர்ராஜ்குமார் வரவேற்று பேசினார்.விழாவில் நலவாரிய புதிய பதிவு அட்டைகளை 47 பேருக்கும், நலவாரிய மாத ஓய்வூதிய ஆணைகளை 53 பேருக்கும், வருவாய் துறை சார்பில் 38 பேருக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 5 பேருக்கு விதவை உதவித்தொகைகளை வழங்கினார்.

பச்சாபாளையம் ஊராட்சியில் கதிரடிக்கும் தளம் அமைத்தல், பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல், வாகன நிறுத்தம், கிராம பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட17 பணிகளுக்கு மொத்தம் ரூ.74 லட்சம் மதிப்பிலான திடப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஏ லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி, வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் மு.கனியரசி, வெள்ளகோவில் ஒன்றிய திமுக செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், லக்மநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் அழகரசன், ஆதவன் ஜெகதீஷ். வி.சிவகுமார்,எஸ்.பி. சக்திவேல், அருள்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News