உள்ளூர் செய்திகள்
காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.
காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் நிகழ்ச்சி
- எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது .
- எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது . நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஏழை மக்களுக்கான திட்டங்களையும், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.