உள்ளூர் செய்திகள்

மேயர் ஆய்வு செய்த காட்சி.

தீ விபத்து ஏற்பட்ட குப்பை கிடங்கில் மேயர் ஆய்வு

Published On 2023-07-06 13:06 IST   |   Update On 2023-07-06 13:06:00 IST
  • சமூக விரோதிகள் குடித்து விட்டு பின்னர் புகைபிடித்து அந்த நெருப்பை அப்படியே போட்டு செல்கின்றனர்.
  • தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 3-வது மண்டலம் பகுதியில் வீடு வீடாக சேகரிக்கப்படும் குப்பைகள் டிராக்டர், லாரி மூலம் காங்கயம் சாலை முதலிபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு குப்பைகளை அப்படியே கொட்டி விட்டு செல்வதால் இரவு நேரங்களில் உலாவரும் சமூக விரோதிகள் குடித்து விட்டு பின்னர் புகைபிடித்து அந்த நெருப்பை அப்படியே போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அவ்வப்போது தீவிபத்துகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு குப்பையில் கொட்டப்படும் பாறைகுழியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இது போன்ற தீ விபத்து வருங்காலங்களில் ஏற்படாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

Tags:    

Similar News