உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ காளிகுமாரசுவாமி, பக்தர்கள் காப்பு கட்டி கொண்ட காட்சி.

திருப்பூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது பக்தர்கள் விரதம் இருக்க காப்பு கட்டினர்

Published On 2022-10-25 06:24 GMT   |   Update On 2022-10-25 06:24 GMT
  • ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்வர்கள்.
  • 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

வீரபாண்டி :

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். இன்று முதல் சஷ்டி விரதம் ஆரம்பநாள். அதன்படி திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று பின்பு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை நடைபெற்ற பின்பு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டார்கள்.

உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா இன்று தொடங்குகிறது. மாலை 6:30 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை அபிஷேகம், யாகசாலை வேள்வி பூஜை ,திருவிழா பிரசாதம் வழங்கும் விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை யாகசாலை வேள்வி பூஜை அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நிகழ்ச்சிகளும் மாலை 6:30 முதல் மணி முதல் 7-30 மணி வரை உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் ,அலங்காரம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News