உள்ளூர் செய்திகள்

நகராட்சி கூட்டம் நடைபெற்ற காட்சி.

காங்கயம் நகராட்சி கூட்டம்

Published On 2023-07-06 11:02 IST   |   Update On 2023-07-06 11:02:00 IST
  • நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது.
  • தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுகிறது.

காங்கயம்:

காங்கயம் நகராட்சி சாதாரணக்கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பழையகோட்டை சாலை, கரூர் சாலை, திருப்பூர் சாலை, வாய்க்கால்மேடு, மூர்த்திரெட்டிபாளையம், குதிரைப்பள்ளம்சாலை, அகிலாண்டபுரம், கோட்டைமேடு, கார்த்திகைநகர், பாரதியார் வீதி, காந்திநகர், உடையார்காலனி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதால் அதனை சரி செய்யும் பணியை மேற்கொள்வது, குடிநீர் மின் மோட்டார் இயங்காமல் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் தடைபடுவதால் அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கலந்து கொண்ட நகராட்சி கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் குடிநீர் விடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், வீதி. வீதியாக பிரித்து விடவேண்டும் எனவும், வார்டு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சரியாக எடுக்க வருவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகள் சற்று தாமதமாக நடைபெறுவதால், தூய்மை பணி ஆட்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News