உள்ளூர் செய்திகள்

தள்ளுவண்டி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி. 

குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - தரமான பொருட்களை பயன்படுத்த உத்தரவு

Published On 2023-03-28 11:32 GMT   |   Update On 2023-03-28 11:32 GMT
  • 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.
  • ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதி காரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் குழுவினர் குளிர்பா னகடைகள், பழக்கடைகள், பழச்சாறு, ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில்பெட்டிகள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து 12 கடைகளில்ஆய்வு செய்தனர்.

அப்போது கோடை காலத்தில் கடைபிடிக்க வே ண்டிய வழிமுறைகள்குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலி தாம்பிகை கூறியதாவது:- குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள், தாங்கள்உபயோக ப்படுத்தும் ஐஸ்கட்டி, பார் தரமானதாக இருக்க வேண்டும்.அதிக வண்ணங்களை குளிர்பானத்தில் சேர்க்க கூடாது. குளிர் பானம் தயாரிக்கும் இடம் சுத்தமா கவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள், தரமான பழங்களை பயன்படு த்துவதோடு, அதற்கு தேவையான தண்ணீர்,பால் போன்றவை தரமானதாக இருக்கவேண்டும்.பொதுமக்கள் குளிர்பானம், ஐஸ்கள்மலிவான விலையில்அதிக வண்ணங்களில் இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது. குளிர்பான பாட்டில்கள், உரிய லேபிள் விவரங்கள், தயாரிப்பு, காலாவதி தேதி அறிந்து பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கோடைகாலம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். விதிமீறும் உணவு வணிகர்கள் மீதுசட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும். உணவு தொடர்பா னபுகார்களை 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்என்று அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News