உள்ளூர் செய்திகள்

கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-08-21 15:42 IST   |   Update On 2023-08-21 15:42:00 IST
  • வேதனை அடைந்த விவசாயி தனக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
  • பெரியசாமி என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக்கொன்றன.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டியில் பெரியசாமி என்பவர் வளர்த்து வந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்துக்கொன்றன. இதையடுத்து பெரியசாமி உடுமலை காவல்துறை , உடுமலை வட்டாட்சியர் மற்றும் கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார்.

வேதனை அடைந்த விவசாயி தனக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

Tags:    

Similar News