உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
அரசுப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் முன்னாள் மாணவர்களை ஈடுபடுத்த கல்வித்துறை திட்டம்
- இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
- சிறப்பாக செயல்படும், பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறது.
திருப்பூர்:
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில், முன்னாள் மாணவர்களை ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மாவட்ட வாரியாக, முன்னாள் மாணவர் சங்கம் சிறப்பாக செயல்படும், பள்ளி தலைமையாசிரியர்களை ஒருங்கிணைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறது. கோவை மண்டல அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 90க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள் தங்கள் பள்ளிகளில், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்த விதம் குறித்து, கருத்துக்களை பகிர்ந்ததோடு, இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், விரிவாக்குவதற்கான செயல் திட்டங்களையும் முன் வைத்தனர்.