உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு இலவச பால் வழங்கப்பட்ட காட்சி. 

உடுமலை ஆராதனா கபே சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச பால்

Published On 2022-08-18 07:35 GMT   |   Update On 2022-08-18 07:35 GMT
  • இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
  • உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

உடுமலை :

உடுமலை வ. உ. சி. வீதியில் செயல்பட்டு வருகிறது ஆராதனா கபே. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாள்தோறும் இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த கடையின் உரிமையாளர் செல்வகுமார் அவரது மனைவி ஸ்ரீ சத்யா இருவரும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

ஸ்ரீ சத்யா அனாதை பிணங்களை அடக்கம் செய்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகிறார். மேலும் அனாதை பிணங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகிறார். மேலும் உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார். கொரோனா காலங்களில் இலவச முக கவசம், சானிடைசர் போன்றவற்றை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கி சேவை புரிந்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் இவர்கள் நடத்தி வரும் மினி ரெஸ்டாரண்டில் மாட்டுப்பால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தபட்ட பின்னரே கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை விற்பனை செய்வதில்லை என்ற குறிக்கோளுடன் தன்னலம் பாராமல் செய்துவருகின்றனர். இவர்களின் சேவையில் மற்றொரு மைல் கல்லாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை துவக்கி இன்றுவரை செயல்படுத்தி வருகிறார்கள். ஸ்ரீசத்யாவின் சேவையை தாய்மார்கள் பாராட்டி வருகின்றனர்.  

Tags:    

Similar News