உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பள்ளி மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க கோரிக்கை

Published On 2022-11-29 06:11 GMT   |   Update On 2022-11-29 06:11 GMT
  • மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
  • நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.

திருப்பூர் :

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் திருப்பூா் மாநகராட்சி 3வது மண்டல மாநாடு ஏஐடியூசி. சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:-திருப்பூா் மாநகராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்.

அதேபோல வாா்டில் ஒரு இடத்திலாவது நூலகம் அமைக்க வேண்டும். மாநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகர பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News