உள்ளூர் செய்திகள்

 பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தாராபுரத்தில் பாலை தரையில்கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2023-03-23 17:25 IST   |   Update On 2023-03-23 17:25:00 IST
  • 1000 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது.
  • விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை.

தாராபுரம் :

தாராபுரத்தில் 100க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பால் விற்பனை செய்து வருகின்றனர். தாராபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பாலை அப்பகுதி பொதுமக்கள் வாங்கி செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இந்நிலையில் மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான புண்ணாக்கு, பசுந்தீவனம், ஆட்கள் கூலி ,விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுப்படி ஆவதில்லை. எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்:-

மாடுகளை பராமரிக்க தேவையான வேலை ஆட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை. கூட்டுறவு சங்கம் கொடுக்கும் பால் விலை கட்டுபடியா கவில்லை. எனவே பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும். மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். அரசு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

Tags:    

Similar News