உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சாய்ந்த வாழை மரங்களுக்கு காப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

Published On 2023-05-24 08:54 GMT   |   Update On 2023-05-24 08:54 GMT
  • இயற்கை பாதிப்புகளின் போது வாழைக்கு ஏற்படும் சேதத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளின் போது வாழைக்கு ஏற்படும் சேதத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் மழைக்கு பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:- இயற்கை சீற்றத்தின் போது சேதம் ஏற்படும் வாழைக்கு காப்பீடு வழங்க ப்படும் என தோட்டக்கலை த்துறையினர் நம்பிக்கைய ளிக்கின்றனர். அதனை நம்பியே காப்பீடு திட்டத்தில் இணைகிறோம்.வருவாய் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கள ஆய்வு செய்த பிறகே, சேத அறிக்கையை காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.திடீர் மழை, சூறைக்காற்றுக்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பல்வேறு காரணங்களை கூறி காப்பீடு மறுக்கப்ப டுகிறது. சமீபத்தில் மழை, சூறவாளிக்கு 75 ஆயிரம் வாழை மரங்கள் வரை சாய்ந்திருக்கும்.அவற்றுக்கு காப்பீடு, இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News