உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மானியம் பெற்று புதிய மின்மோட்டார் பம்ப் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-08-11 07:57 GMT   |   Update On 2022-08-11 07:57 GMT
  • அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மானியம் பெற்று புதிய மின்மோட்டார் பம்ப் அமைக்க விண்ணப்பிக்க முடியும். திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதியதாக பொருத்தவும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் 3 ஏக்கர் வரை விளைநிலம் வைத்துள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாய சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம், வங்கி புத்கத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.மேலும் விவரங்களுக்கு திருப்பூர் கோட்ட செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெயக்குமாரை 94432 43495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் திருப்பூர், தாராபுரம், உடுமலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News