உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய தொழிலாளி.

ராயர்பாளையத்தில் சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கிய தொழிலாளி - சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ காட்சியால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2022-07-07 16:38 IST   |   Update On 2022-07-07 16:38:00 IST
  • திருப்பூர் - பல்லடம் சாலை அதிக அளவில் வாகனங்கள் பயன்படுத்தப்படும் முக்கிய சாலை
  • சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூரைச் சேர்ந்தவர் காட்டான். இவர் பல்லடம் ராயர் பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் அவரது மகனை பார்க்க சென்றுள்ளார் .அப்போது சாலையோரம் இருந்த குழியில்அவரது வாகனம் இறங்கியது .இதில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்டான் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தின் சிசிடிவி. காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் - பல்லடம் சாலை அதிக அளவில் பயன்படுத்தப்படும் முக்கிய சாலையாக உள்ளது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால் ஏராளமானோர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையில் உள்ள குழிகளை மூடி விபத்து நடப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News