உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயத்தில் லாரியில் சிக்கி டிரைவர் பலி

Published On 2023-06-09 12:26 IST   |   Update On 2023-06-09 12:26:00 IST
  • லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது.
  • இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.

காங்கயம் :

மதுரை மாவட்டம், இரவாடநல்லூரைச் சோ்ந்தவா் கண்ணன் (வயது 38). இவா், சங்ககிரியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் கம்பெனியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் காங்கயத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் லோடு இறக்குவதற்காக புதன்கிழமை வந்துள்ளாா். நெல் லோடு இறக்கிய பின் இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.

அப்போது லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது. பின்னா், லாரியில் இருந்து இறங்கி தாா்ப்பாயை சரி செய்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக முன்னோக்கி நகா்ந்த லாரி எதிரே இருந்த சுவரின் மீது மோதியது. இதில், ஓட்டுநா் கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காங்கயம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News