உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் சரியான நேரத்தில் வருகிறார்களா? - கண்காணிக்க அதிரடி உத்தரவு

Published On 2023-08-08 07:01 GMT   |   Update On 2023-08-08 07:01 GMT
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
  • மருத்துவ உள்ள புகார்கள் எது இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம்.

 திருப்பூர்:

தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவம னைகளில் பணியாற்றும் ஒரு சில டாக்டர்கள் சரியான நேரத்துக்கு வராமலும் சிலர் 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் பணிக்கு வராத நாட்களிலும் கையொப்பமிடுவதாக புகார்கள் அரசுக்கு தொடர்ந்து சென்றது.

இதையடுத்து அரசு டாக்டர்களின் வேலை நேரத்தை கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் ககன்தீப்சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாவட்ட, தாலுகா, தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் உள்ள தலைமை டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 3மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நிர்வாக பணியில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

இதர டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இருப்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணி நேரங்களில் இல்லையா, மருத்துவ சேவை குறைகள், அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கிறார்களா உள்ளிட்ட புகார்கள் இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

Tags:    

Similar News