உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தூய்மைப்பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்க கோரிக்கை

Published On 2023-06-13 08:25 GMT   |   Update On 2023-06-13 08:25 GMT
  • தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்
  • நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.

அவிநாசி :

அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் குறைவான ஊதியம் வழங்குவதுடன், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இது குறித்து தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:- தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக தெக்கலூா் ஊராட்சியில் வழங்கப்பட்டு வருகிறது.அதிலும் மாத ஊதியத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்து வழங்குகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமாரிடம் கேட்டபோது, தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களில் விடுப்பு எடுத்தவா்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறேன். தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Tags:    

Similar News