உள்ளூர் செய்திகள்

தாய்லாந்து நாட்டு வகை மரவள்ளி கிழங்கு சாகுபடி

Published On 2022-12-08 07:20 GMT   |   Update On 2022-12-08 07:20 GMT
  • நல்ல நீர்வளம் உள்ளதால் விவசாயிகள் வாழை நடவை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர்.
  • தாய்லாந்து கருப்பு ரோஸ் வகை ஏக்கருக்கு 18 டன் வரை விளைச்சல் தந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.

அவிநாசி : 

அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடுகனூர் பகுதியில் உள்ள மூலத்தோட்டத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் தாய்லாந்து நாட்டின் கருப்பு ரோஸ் வகையை சேர்ந்த மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சாதாரணமாக ஏக்கருக்கு 10 முதல் 11 டன் விளைச்சல் தரும். மற்ற மரவள்ளி வகைகளை விட தாய்லாந்து கருப்பு ரோஸ் வகை ஏக்கருக்கு 18 டன் வரை விளைச்சல் தந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் கூறுகிறார்.

மரவள்ளி சிப்ஸ் மற்றும் மாவு அரைக்க பயன்படுத்துவதற்காக கேரளாவிலிருந்து அதிகளவில் வந்து வாங்கி செல்வதாகவும், கோவையில் உள்ள பிரபலமான சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி ஆட்கள் மொத்தமாக டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர். இம்முறை விளைச்சல் அதிகம் மற்றும் விலையும் கூடுதலாக கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

தமிழகத்தில் சில ஆண்டுகளாக நல்ல மழை பெய்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல அணைகள் நிரம்பி வழிவதால் கால்வாய் பாசனமும் கை கொடுக்கிறது.இதன் காரணமாக விவசாயிகள் ஒரு ஆண்டு பயிரான வாழை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இது சிப்ஸ் தயாரிக்க பெருமளவில் பயன்படுகிறது. சபரிமலை சீசன் காலத்தில் தேவை அதிகரிப்பதால் இதன் விலை அதிகரிப்பது வழக்கம்.

இதனை எதிர்பார்த்து பலரும் நேந்திரன் வாழை சாகுபடி செய்துள்ளனர். இதுவரை ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது நேந்திரன் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் இதன் விலை படிப்படியாக குறைந்து 32 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

நல்ல நீர்வளம் உள்ளதால் விவசாயிகள் வாழை நடவை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால் சந்தைக்கு நேந்திரன் வரத்து அதிகரித்து விலை மேலும் சரிந்து விடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

Tags:    

Similar News