உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
அவிநாசி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.22.29 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
- ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,539 வரை விற்பனையானது.
- மொத்தம் ரூ.22 லட்சத்து 29ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.22.29 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, 970 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,539 வரையிலும், மட்டரக (கொட்டுரகம்) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,500 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 29ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.