உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

போதை பொருள் பயன்பாடு தடுப்பது குறித்து பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆலோசனை

Published On 2022-08-30 05:57 GMT   |   Update On 2022-08-30 05:57 GMT
  • மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • எண்ணும் எழுத்தும் கற்றல் முறை என பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.

மடத்துக்குளம் :

உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் தோறும் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டு, எண்ணும் எழுத்தும், கலை மற்றும் கலாசாரம், நூலகம் மற்றும் வாசிப்பு, நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வி ஆலோசிக்கப்படுகிறது.

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள், மதிப்பீடுகள் மற்றும் வினாடி வினா, நூலகம் மற்றும் வாசிப்புத்திறன், கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு ஆகிய கருப்பொருளை மையப்படுத்தி விவாதிக்கப்படுகிறது.அவ்வகையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார்.

விருகல்பட்டி ஊராட்சிப்பள்ளி ஆசிரியர் ஜவகர், உயர்கல்வி சார்ந்த விபரங்களை விரிவாக பேசினார். ஆசிரியர்கள் ஜோதிமணி, பாலகிருஷ்ணன், தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் ஜெனட்ரோஸிலின், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.

கூட்டத்தில், போதைப்பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல், மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உயர் கல்வி வேலை வாய்ப்பு குறித்து சரவணன் பேசினார். மாணவி ஜனனி நன்றி கூறினார்.

சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர் சரவணன் பயிற்சி குறித்து பேசினார். வட்டார வளமைய ஆசிரியர் பிரபாகரன், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.தொடர்ந்து ஆர்.டி.ஐ., சட்டம், அரசின் நலத்திட்டம், மத்திய மாநில அரசின் உதவித்தொகை, பள்ளி மேம்பாட்டு திட்டம், எண்ணும் எழுத்தும் கற்றல் முறை என பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.

மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி, கனகராஜ், சடையப்பன் ஆறுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு குழுத்தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் சித்ரா, குழு உறுப்பினர்கள் கனகராஜ், பாலசுப்ரமணியன், காயத்ரி, தனலட்சுமி, சரோஜினி மற்றும் தலைமையாசிரியை கவுரி, உமாமகேஸ்வரன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News