உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அலகுமலையில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற கலெக்டர் உத்தரவு

Published On 2022-07-28 07:22 GMT   |   Update On 2022-07-28 07:22 GMT
  • அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது.
  • நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் :

பொங்கலூர் அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தொங்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மந்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார் என மலைப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததன் பேரில் நில அளவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவின் பேரில் நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாளை 29-ந் தேதிக்குள் கட்டடங்களை அகற்றி, மந்தை புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனருக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News