உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

உஷார்! ஆன்லைன் லோன் செயலிகளை தவிர்க்க - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Published On 2023-07-22 12:31 IST   |   Update On 2023-07-22 12:31:00 IST
  • பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது.
  • தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.

திருப்பூர்:

லோன் ஆப்களை நம்பி கடன் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை 

பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது. முழு கடன் தொகையை திருப்பி செலுத்தி முடித்தாலும் அவர்கள் விடுவதில்லை.இன்னும் கடன் தொகை பாக்கி இருப்பதாக கூறி, மிரட்டி வசூல் செய்கின்றனர். வட்டி பணம் தராவிட்டால், உங்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் அக்கவுன்ட் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உங்க போட்டோக்களை மார்பிங் செய்து, உங்கள் மொபைல் போன் தொடர்பில் உள்ள நபர்களின் வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

டெலி கிராம் செயலி லிங்க், சினிமா, ஓட்டல் ரிவ்யூ என்ற பெயரிலும், கமிஷன் தருவதாக பெரிய அளவில் மோசடி நடக்கிறது.சமீபத்தில் பிட் காயின் டெபாசிட் முறைகேடு தொடர்பாகவும், புகார் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் பதிவு செய்வதில், கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் குற்றவாளிகளை வளைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

போலீசார் கூறும்போது, பெரும்பாலான லோன் ஆப்கள் மோசடியானவை. தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.

பணம் வாங்கும் நபர்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற தகவல்களை பெற்று, அதில் முறைகேடு செய்யும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News