விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.
குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து காங்கயம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
- காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது.
காங்கயம் :
காங்கயம் திருப்பூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் காங்கயம் நகரம், ஊராட்சி பகுதிகளில்குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒழிப்பது, சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது, அனைத்து பொது இடங்கள் மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மகேஷ்குமார், நகராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊதியூர், காங்கயம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.