உள்ளூர் செய்திகள்

வெண்கலப்பதக்கம் வென்ற கபடி வீராங்கனைகளை பாராட்டிய காட்சி.

தேசிய விளையாட்டில் பங்கேற்ற திருப்பூர் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

Published On 2022-07-07 07:22 GMT   |   Update On 2022-07-07 07:22 GMT
  • கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது.
  • தமிழக பெண்கள் அணி கபடி போட்டியில் கலந்து கொண்டு 3 வது இடம் பெற்று வெண்கல பதகத்தை வென்றனர்.

திருப்பூர்

மத்திய அரசால் நடத்தப்படும் கேலோ இந்தியா தேசிய கபடிப்போட்டி கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடந்தது. இதில் தமிழக பெண்கள் அணி கலந்து கொண்டு 3-வது இடம் பெற்று வெண்கல ப்பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் தமிழக மகளிர் அணியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 கபடி வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடினர். வெண்கலப்பதக்கம் வென்ற திருப்பூர் கபடி வீராங்கனைகளுக்கு பாராட்டும், பரிசளிப்பு விழாவும் மாவட்ட கபடி கழகத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கபடி கழக செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக துணைத்தலைவரும், மாநகர மன்ற உறுப்பினருமான செந்தூர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கபடி கழக பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, செய்தி தொடர்பாளர் சிவபாலன், புரவலர்கள் மினுபேஷன் கே.எம்.வேலுச்சாமி, மகாலட்சுமி ரத்தினசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு, விளையாட்டு அலுவலர் எம்.ராஜகோபால் கலந்து கொண்டு திருப்பூர் வீராங்கனைகள் ஏ.வி.பி.கல்லூரியில் படிக்கும் யாழினி, உடுமலையில் படிக்கும் கஜிதாபீபி ஆகியோருக்கு பாராட்டும், பரிசும் வழங்கினார். ஆண்கள் பிரிவில் சீனியர் தேசிய போட்டி அரியானாவில் நடந்தது.

இதில் தமிழக அணிக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணமூர்த்தி, கன் னீஸ்வரன் ஆகியோர் தேர்வு பெற்று சேலத்தில் நடைபெறுகிற பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழாவில் விளையாட்டு கழக தடகள பயிற்சியாளர் திவ்விய நாகேஸ்வரி, மாவட்ட கபடி கழக துணை செயலாளர் சின்னு, அன்னை செல்வ ராஜ், நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.சேகர், தண்டபாணி, பாண்டியன், செந்தில், தர்மராஜ், டெக்னிக்கல் மெம்பர் ஆர்.ரங்கசாமி, ராஜன், வாசு ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் மாவட்ட கபடி கழக நடுவர் குழு சேர்மனும், சர்வதேச நடுவருமான ஆர்.முத்துசாமி வரவேற்றார்.

முடிவில் இணை செயலாளர் பி.எஸ்.என்.எல். வாலீசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News