உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலை பகுதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

Published On 2023-10-27 10:32 GMT   |   Update On 2023-10-27 10:32 GMT
  • சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உடுமலை:

கார்த்திகை பவுர்ணமியன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவது போன்று ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பானதாகும்.அன்னாபிஷேகத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வதால் பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் கிடைப்பதுடன் கடன், வறுமை நீங்கி, பாவங்கள் விலகி செல்வ வளம் சேரும்.இதனால் ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்கள் வண்ண வண்ண விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி விழாவுக்கு தயாராகி வருகிறது.

பொதுமக்களும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, பழவகைகள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை கோவில்களுக்கு கொடுத்து வருகின்றனர்.மேலும் நேற்று பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News