உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம், விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள்

Published On 2022-11-05 10:34 IST   |   Update On 2022-11-05 10:34:00 IST
  • நோய் தடுப்பு மற்றும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
  • ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் திட்டம் 2022-23 ம் நிதியாண்டில் நடைமுறை படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள் சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நவம்பர் 2022 மாதம் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரை கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News