உள்ளூர் செய்திகள்

அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்ற போது எடுத்த படம்.

தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம் மீது நடவடிக்கை

Published On 2022-11-24 04:11 GMT   |   Update On 2022-11-24 04:11 GMT
  • பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும்.
  • எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

   பல்லடம் : 

பல்லடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பல்லடத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம், நகராட்சி எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டம் துவங்கிய போது இது எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்த ஆதரவுக் கூட்டம். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க, பா.ம.க., இந்து முன்னணி, கிளை நிர்வாகிகள் எழுந்து வெளி நடப்பு செய்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அழைத்துவிட்டு, எரிவாயு தகன மேடை ஆதரவுக் கூட்டம் என்று அறிவிப்பது முறையில்லாத செயல், அப்படி இருந்தால் முன்னரே எரிவாயு தகன மேடை ஆதரவு கூட்டம் என்று எங்களிடம் சொல்லி இருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம், என அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசுகையில், பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும், மக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எதிர்க்கிறார்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டு,எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News