உள்ளூர் செய்திகள்

4 அடி நீளம் உள்ள மண்ணுளிப் பாம்பு பத்திரமாக வனச்சரகப் பணியாளரிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.

பல்லடத்தில் அரிய வகை மண்ணுளி பாம்பு பிடிபட்டது

Published On 2022-11-13 07:33 GMT   |   Update On 2022-11-13 07:33 GMT
  • நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள்.
  • மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

பல்லடம் :

பாம்பு வகைகளில் மண்ணுளி பாம்பும் ஒன்று. நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

இதனால் மண் உள்ளே இருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளிப் பாம்பு என மருவி அழைக்கப்படுகிறது. இவை விவசாய நிலங்களில் உள்ள எலிகள், பூச்சிகள் போன்றவற்றை பிடித்து உண்ணும், விவசாயிகளின் நண்பனான இந்த மண்ணுளிப் பாம்புக்கு விஷம் கிடையாது. எனினும் மனிதர்களை இந்தப் பாம்பு நாக்கு மூலம் தீண்டினால் அலர்ஜி ஏற்படும். இந்த நிலையில், பல்லடம் மங்கலம் ரோடு செந்தோட்டம் பகுதியில் வசிக்கும் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சபீனா வீட்டில் புகுந்த மண்ணுளிப் பாம்பு அங்கிருந்த பூச்செடிக்குள் புகுந்து கொண்டது. இதனைப் பார்த்த சபீனா குடும்பத்தினர். அதனை சாக்கு பைக்குள் வைத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் பல்லடம் வந்தார். அவரிடம் சுமார் 4 அடி நீளம் உள்ள மண்ணுளிப் பாம்பு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News