உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட சந்தோஷ்.

பல்லடம் அருகே வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2022-08-24 10:43 GMT   |   Update On 2022-08-24 10:43 GMT
  • அரிசி மூட்டைகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானது.
  • வாகனம் விபத்தில் சிக்கிய உடன் அதிலிருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அரிசி மூட்டைகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. வாகனம் விபத்தில் சிக்கிய உடன் அதிலிருந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் வாகனத்தின் உள்ளே ரேசன் அரிசி மூட்டைகள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில், திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் அதிலிருந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கோவையைச் சேர்ந்த சந்தோஷ்(35 )என்பதும், 3 டன் ரேசன் அரிசியை வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது .இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News