உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தீபாவளி பண்டிகையொட்டி ஆடுகளை திருடும் கும்பல்

Published On 2022-10-21 15:14 IST   |   Update On 2022-10-21 15:14:00 IST
  • இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் ௬௦ செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா்.
  • காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

குண்டடம் :

தாராபுரம் தாலுகா குண்டடம் அடுத்துள்ள இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் 60 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாா். காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. எண்ணிப் பாா்த்த போது 7 பெரிய செம்மறி ஆடுகளைக் காணவில்லை. மேலும் தோட்டத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பி வேலியின் ஒரு இடத்தில் அறுத்து உள்ளே நுழைந்து ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் மர்மநபர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News