உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை அருகே பள்ளி மாணவியை தாக்கியதாக தலைமை ஆசிரியை மீது வழக்கு

Published On 2022-09-24 05:15 GMT   |   Update On 2022-09-24 05:15 GMT
  • உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
  • 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்களின் விசாரணையைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பிறகு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அது ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி மாணவியின் தாயார் வக்கீல் உதவியுடன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News