உள்ளூர் செய்திகள்

தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ள்வர்களை படத்தில் காணலாம்.

தேசிய களரி போட்டியில் தமிழக அணி சார்பில் 8 பேர் பங்கேற்பு

Published On 2023-10-30 16:05 IST   |   Update On 2023-10-30 16:05:00 IST
  • களரிப்பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.
  • நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார்.

உடுமலை:

ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு கோவாவில் நடைபெறுகிறது. 43 வகையான விளையாட்டுகள் அதில் அடங்கும்.அதில் முதல் முறையாக களரிப்பயட்டு சேர்க்கப்பட்டு உள்ளது..37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் இம்மாதம் தொடங்குகிறது.

இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் .களரிப்பயட்டுப் போட்டிகள் நவம்பர் மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

இதில் தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் சார்பில் மடத்துக்குளம் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் அறக்கட்டளை சார்பில் ஜீவா, கே.ருத்ரேந்தர்,டி.விக்னேஸ்வரன்.எம்.முத்துச்செல்வம், வி.தரன்,எம்.விக்னேஷ்,ஆர்.ராமசந்திரன்.,கே.விசாலிஆகியோர் களரி பயட்டு போட்டியில் உடுமலை ,மடத்துக்குளம் பகுதியில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

7வகையான பிரிவுகளில் போட்டி நடைபெறுகின்றது. சுவடு, மெய்பயட்டு,உருமிவீசல்,சவுட்டி பொங்கல், கைப்போர்,கேட்டுக்கரி, வாளும் பரிச்சா ஆகிய பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஆலோசனை கூட்டம் உடுமலை சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு களரி பயட்டு ஸ்டேஷன் தமிழ்நாடு செயலாளர் ஆசான் வீரமணி தலைமை வகித்தார்.

லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் எஸ் .ஆர்.எஸ் .செல்வராஜ் , விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி, பணி நிறைவு நூலகர் கணேசன், ஜிவிஜி., காசாளர் சங்கர மகாதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தகவலை தமிழ்நாடு களரி பயட்டு அசோசியேசன் மாநில செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

Tags:    

Similar News