உள்ளூர் செய்திகள்

பேருந்தின் சக்கரத்தில் ஸ்கூட்டர் சிக்கியிருக்கும் காட்சி.

பல்லடத்தில் தனியார் பஸ் மோதி 8 பேர் படுகாயம்

Published On 2023-08-12 10:33 GMT   |   Update On 2023-08-12 10:33 GMT
  • முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது.
  • பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது.

பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையம் அருகே, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பஸ் பின்புறமாக மோதியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உள்பட, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், அனுசுயா (63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8), ஆகியோர் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது. ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News