உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காசி ஆன்மீக பயணத்தில் அா்ச்சகா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் - தமிழக அரசுக்கு அா்ச்சகா்கள் கோரிக்கை

Published On 2022-12-01 05:39 GMT   |   Update On 2022-12-01 05:39 GMT
  • 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்.

திருப்பூர் :

காசி ஆன்மீகப் பயணத்தில் அா்ச்சகா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அா்ச்சகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசு விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை மூலம் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தகுதி வாய்ந்த 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். இதனால் பூசாரிகள், அா்ச்சகா்களின் பக்தி அனுபவம் அதிகரிப்பதுடன், பக்தா்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு செய்யவும், ஏனைய பக்தா்கள் காசி யாத்திரை சென்று வர அனுபவ ரீதியாக சொல்லவும் உதவியாக இருக்கும். மேலும் நாள் முழுவதும் கோவிலில் பணியாற்றும் அா்ச்சா்களுக்கு இந்த ஆன்மிகப் பயணம் புத்துணா்ச்சி அளிப்பதாக இருக்கும். 200 பக்தா்கள் செல்லும் ஆன்மிக பயணத்தில், அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News