உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 384 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-08-26 06:48 GMT   |   Update On 2023-08-26 06:48 GMT
  • புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் கடந்த 2 மாதங்களாக நடத்திய சோதனையில் 384 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த 2 மாதங்களாக புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடா்பாக மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். இதில் தடை செய்யப்பட்ட 384 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடா்ச்சியாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் 94404-2322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News