உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவிநாசியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது 350 கிராம் தங்கம் பறிமுதல்

Published On 2022-09-14 05:20 GMT   |   Update On 2022-09-14 05:20 GMT
  • பூட்டை உடைத்து 39 பவுன் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

அவிநாசி :

அவிநாசி சக்திநகர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரபு என்பவர் கடந்த ஜூலை மாதம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 39 பவுன் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல அவிநாசி ராஜாஜி வீதியை சேர்ந்த வஹாப் என்பவர் கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 60 பவுன் தங்கநகை, ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேலும் அவிநாசி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்குகளில் தொடர்புடையவர்களான கோவை கணபதி மணியகாரன்பாளையத்தில் வசித்து வரும் மதுரை காளவாசலை சேர்ந்த ஜெயமணி மகன் மகேந்திரன்(30), அதே பகுதியில் வசித்து வரும் மதுரை பழங்காநத்தம் தண்டக்காரன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் சதீஷ்(24), மதுரை காளவாசலை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜ்கண்ணன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 350 கிராம் தங்கம், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய முக்கியமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News