உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் விபத்து இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி

Published On 2023-04-26 11:31 GMT   |   Update On 2023-04-26 11:31 GMT
  • 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
  • 2019ல் லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

திருப்பூர் :

திருப்பூரில், விபத்து இழப்பீடு வழங்காததால், மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். தாராபுரம், ஆலாம்பாளை யத்தை சேர்ந்தவர் செல்வவேல், 16. இவர் தனது, இரு நண்பர்களுடன் காரில் கடந்த, 2014ல் சென்ற போது, அரசு பஸ் மோதியதில், காரில் சென்ற, மூவர் இறந்தனர். இதில், செல்வவேல் இழப்புக்கு, இழப்பீடு கேட்டு அவரது சகோதரி செல்வபிருந்தா, திருப்பூர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

கடந்த, 2019ல், 13 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை இழப்பீடு வழங்காததால், பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். நேற்று, பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதைபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் இனிகோ ஜான்துரை, 28. கடந்த, 2017ல், டூவீலரில் முதலிபாளையம் பிரிவு அருகே சென்ற போது, அரசு பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பான வழக்கில், 2019ல், லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காத காரணத்தால், பஸ்சை நேற்று ஜப்தி செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் ராஜன், 45. கடந்த, 2016ல், உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது, அரசு பஸ் மோதியதில் இறந்தார். இதுதொடர்பான இழப்பீடு வழக்கில், 12 லட்சத்து, 75 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது. இப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Tags:    

Similar News